Saturday, April 4, 2026
Saturday, April 4, 2026
Home » ரிதன்யா கணவர் , மாமனார் , மாமியாருக்கு ஜாமின்

ரிதன்யா கணவர் , மாமனார் , மாமியாருக்கு ஜாமின்

by thektvnews
0 comments

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில் கடந்த ஜூலை மாதம் ரிதன்யா கணவர் கவின் மற்றும் ஈஷ்வர் முர்த்தி (மாமனார்) , சித்ரா தேவி (மாமியார்) கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி
நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப்பெண் ரிதன்யா விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கணவர் கவின்குமார், மாமனார் மற்றும் மாமியார் சித்ரா ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், ரிதன்யாவின் முழுமையான உடற்கூராய்வு,
தடையவியல் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த மனுக்கள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், திருமணத்திற்கு முன்பே ரிதன்யா தற்கொலை மனநிலையில் இருந்திருக்கிறார், திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லை, வரதட்சணைத் துன்புறுத்தலில் எதுவும் நடைபெறவில்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். விசாரணை நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கோரினார்.

முக்கிய சாட்சிகளிடம் விசாரணையும் முடிவடைந்து விட்டது என்பதால் மனுதாரர்களை சிறையில் வைத்திருக்க அவசியம் இல்லை எனக் கூறி மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் காவல் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது
என்றும் மூவருக்கும் நீதிபதி நிபந்தனை ஜாமீன் விதித்துள்ளார்.

மேலும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான இரு நபர் பிணையை அவிநாசி நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அவிநாசி நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் மாநிலத்தை விட்டு வெளியேறக்கூடாது என்றும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!