பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது ஆப்கான் நிலநடுக்கம். ஆப்கானில் சமீபத்தில் ஏற்பட்டிருக்க கூடிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்திருக்கிறது. ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களும் தன்னுடைய இரங்கலை பதிவு செய்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளும் நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது என்றும் பிரதமர் மோதி பதிவு செய்திருக்கிறார்.
தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகளும் நடந்து வருகிறது. இரண்டாயிரத்து ஐநூறு பேர் தற்போது வரை காயமடைந்த இருப்பதாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தொடர்ந்து மீட்புப்பணிகள் அங்கு நடந்து வருகின்றன.
இந்த நிலநடுக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி தன்னுடைய பதிவில், இந்த நிலநடுக்கம் தொடர்பாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பார்த்து மிகவும் வருத்தமடைந்தேன் என்றும், தேவையான உதவிகள் அனைத்தும் இந்திய தரப்பிலிருந்து வழங்கப்படும் என்றும் உறுதியளித்து இருக்கிறார்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!