Tuesday, February 17, 2026
Tuesday, February 17, 2026
Home » தங்கத்தின் விலையில் மாற்றம், சென்னையில் இன்றைய நிலைமை

தங்கத்தின் விலையில் மாற்றம், சென்னையில் இன்றைய நிலைமை

by thektvnews
0 comments

தங்கத்தின் விலையில் மாற்றம், சென்னையில் இன்றைய நிலைமை

சென்னை: சென்னை நகரில் இன்று (செப்டம்பர் 04) தங்க நகை விலை 80 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3,120 ரூபாய் உயர்ந்திருந்தது.

சர்வதேச சந்தை நிலைமைகளின் அடிப்படையில் தங்க விலை தொடர்ந்து சாதனை உயர்வை எட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3,120 ரூபாய் உயர்ந்து, இதுவரை இல்லாத அளவுக்கு 78,000 ரூபாயை எட்டியுள்ளது.

தமிழகத்தில் நேற்று (செப்டம்பர் 03) 22 கேரட் தங்க நகை ஒரு கிராம் ரூ.9,805க்கும், ஒரு சவரன் ரூ.78,440க்கும் விற்கப்பட்டது.

தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்த தங்க விலை இன்று சிறிதளவு குறைந்துள்ளது. அதாவது, ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. சென்னை நகரில் இன்று (செப்டம்பர் 04) 22 கேரட் தங்க நகை விலை ஒரு சவரனுக்கு ரூ.78,360 ஆக குறைந்துள்ளது. மேலும், ஒரு கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூ.9,795 ஆக விற்கப்படுகிறது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!