கடைசி போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறுவது குறித்து முடிவு எடுக்க இன்னும் நிறைய நேரம் உள்ளது என்று தோனி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 10 அணிகள் பங்கேற்ற 18-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை வென்றது.
முன்னதாக, சென்னை அணி கேப்டனாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், இந்த சீசனின் தொடக்கப் போட்டிகளில் சிலவற்றில் பங்கேற்று பின்னர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இதனால், சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டார். ஆனால், அவரது தலைமையிலும் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் காட்டவில்லை.
இந்நிலையில், 44 வயதான தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால், கடைசி போட்டிக்குப் பிறகு தோனி, ஓய்வு பெறுவது குறித்து முடிவு செய்ய இன்னும் நிறைய நேரம் உள்ளது என தெரிவித்தார்.
இந்த நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த சீசனில் தோனி விளையாடப் போகிறார் என்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும், அடுத்த ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஓய்வு பெற தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
