Tuesday, February 17, 2026
Tuesday, February 17, 2026
Home » ஜிஎஸ்டி விகிதம் குறைப்பு: பி. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்தார்

ஜிஎஸ்டி விகிதம் குறைப்பு: பி. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்தார்

by thektvnews
0 comments

ஜிஎஸ்டி விகிதம் குறைப்பு: பி. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்தார்

புதுடில்லி:

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம், பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான வரி விகிதம் குறைப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

தில்லியில் நேற்று நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், சாதாரண மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் விதிக்கப்பட்டிருந்த வரி விகிதங்கள் பெரிதும் குறைக்கப்பட்டன. இதன் விளைவாக, உப்பிலிருந்து கார் வரை பல பொருட்களின் விலைகள் குறையவிருக்கின்றன.

அதேபோல், விவசாயிகள் மற்றும் வேளாண் துறைக்கும் இதனால் நன்மை ஏற்படும். நாட்டின் பொருளாதாரத்தில் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் காப்பீடு மற்றும் உயிர் காப்பு மருந்துகள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

இந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம், ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்றதோடு, அது மிகவும் தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றும் விமர்சித்துள்ளார்.

தனது அறிக்கையில் அவர் கூறியதாவது:

“பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான வரி விகிதம் குறைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால், 8 ஆண்டுகள் மிகவும் தாமதமாகிவிட்டது. தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் இதுவரை அமல்படுத்தப்பட்டு வந்த விகிதங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்படவே கூடாது. கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் விகிதங்களை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருந்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைகள் கவனிக்கப்படவில்லை.”

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!