மனைவிக்கு அதிக வருமானம் இருந்தால் ஜீவனாம்சம் தேவையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை:
மனைவிக்கு அதிக சொத்து, வருமானம் இருந்தால், கணவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னைச் சேர்ந்த டாக்டர் தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நடத்தி, குடும்ப நல நீதிமன்றம், கணவர் தன் மனைவிக்கு மாதம் ரூ.30,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, கணவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி. பாலாஜி, மனைவிக்கு அசையா சொத்துக்கள் மற்றும் சொந்த வருமானம் உள்ளதுடன், அவர் ஸ்கேன் சென்டர் நடத்தி வருவதாக சான்றுகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, ஜீவனாம்ச உத்தரவை ரத்து செய்தார்.
அதே சமயம், மகனின் கல்விச் செலவுக்காக ரூ.2.77 லட்சம் வழங்க மனுதாரர் சம்மதித்திருப்பதால், அந்த உத்தரவில் தலையிடப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
