Table of Contents
பாலக்காட்டில் இரு முதியவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு
பாலக்காடு:
கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் இரண்டு முதியவர்கள் மர்மமான சூழ்நிலைகளில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மங்கரை மாங்குறிச்சி
மங்கரை மாங்குறிச்சி பகுதியில் வசித்து வந்த பங்கஜம் (83). இவரது கணவர் வாசு, 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். பங்கஜத்துக்கு மூன்று பிள்ளைகள் – மூத்த மகன் பாபுராஜ் அமெரிக்காவில், இரண்டாவது மகன் ராஜேஷ் துபாயில், மகள் உஷா மத்திய பிரதேசத்தில் வசித்து வருகிறார்கள். பங்கஜம், கணவரின் சகோதரர் ராஜன் (80) உடன் மாங்குறிச்சி வீட்டில் வாழ்ந்து வந்தார்.
உயிரிழப்பு
செப்டம்பர் 17 ஆம் தேதி, ராஜேஷ் தாயுடன் தொடர்பு கொள்ள முயன்றபோது, பலமுறை அழைத்தும் பதில் கிடைக்கவில்லை. பின்னர் உறவினர்கள் வீட்டுக்கு சென்று கதவைத் தட்டியதும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ராஜன் மேல் மாடியில் தூக்கிட்டும், பங்கஜம் கீழ்மாடி அறையில் தரையில் உயிரிழந்தும் கண்டெடுக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மங்கரை இன்ஸ்பெக்டர் பிரதாப், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்துக்கான காரணம் தெளிவாக தெரியும்” என்று தெரிவித்தார்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
