சாப்பாட்டில் கரப்பான் பூச்சி கிடந்ததால் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த சாப்பாட்டில் இறந்த கரப்பான் பூச்சி கிடந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 12,000 இழப்பீடு வழங்க பிரபல உணவகத்திற்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
சேவை குறைபாட்டுடன் செயல்பட்ட உணவகத்திடம் ரூபாய் 50,000 இழப்பீடு பெற்று தர உத்தரவிட கூறி அபினயா முத்து என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தரமற்ற உணவை விநியோகித்து உணவகம் சேவை குறைபாட்டுடன் செயல்பட்டுள்ளது என்பதை நிரூபணம் செய்த பிறகாக அவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுருக்கிறது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!