Monday, April 6, 2026
Monday, April 6, 2026
Home » யாசகரே அடித்து இழுத்துச் சென்ற போலீசார் நடந்தது என்ன?

யாசகரே அடித்து இழுத்துச் சென்ற போலீசார் நடந்தது என்ன?

by thektvnews
0 comments

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்கிறார்.

இதனால் ஸ்ரீரங்கம் கோயில் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.
கோயில் வளாகத்தில் வயதானவர்கள், யாசகம் கேட்பவர்கள், ஆதரவற்றவர்கள் இருந்தால் அவர்களை வெளியேற்றி காப்பகங்களுக்கு அழைத்துச் செல்ல கலெக்டர் சரவணன் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கான நடவடிக்கையில் இறங்கிய போலீஸார் மருதலி என்பவரை வெளியேற்ற முயன்றனர். அவர் வர மறுத்து தகராறு செய்ததால் போலீஸார் அவரை அடித்தும் காலால் உதைத்தும் தரதரவென இழுத்துச் சென்ற காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தை வீடியோ எடுத்த செய்தியாளரையும் போலீசார் தாக்க முயன்றனர். செய்தியாளர் என சொன்னதும் கையை கீழே இறக்கி அமைதியாகச் சென்றுவிட்டனர்.

ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து வயதான யாசகர்களை மிகவும் கண்ணியமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!