Tuesday, February 17, 2026
Tuesday, February 17, 2026
Home » மங்காத்தா 2 க்கு முற்றுப்புள்ளி: சம்பள விவகாரம் காரணமா ?

மங்காத்தா 2 க்கு முற்றுப்புள்ளி: சம்பள விவகாரம் காரணமா ?

by thektvnews
0 comments

மங்காத்தா 2 க்கு முற்றுப்புள்ளி: சம்பள விவகாரம் காரணமா ?

சென்னை: அஜித் நடித்த ‘மங்காத்தா’ படம் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். சமீபத்தில், 2025 மே 1ஆம் தேதி இந்த படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளை சென்றடைந்தது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மங்காத்தா 2 உருவாக்க முயற்சிகள் தொடங்கப்பட்டதாக கூறப்பட்டது. இயக்குனர் வெங்கட் பிரபுவே மீண்டும் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என்று ஒரு தயாரிப்பாளர் திட்டமிட்டார். ஆனால், அஜித் தரப்பில் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் சம்பளம் கோரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தயாரிப்பாளர் சம்பளத்தில் சலுகை செய்ய வேண்டுமென கேட்டபோதும், அஜித் தரப்பில் எந்த சமரசமும் செய்யப்படாததால், ‘மங்காத்தா 2 எடுக்க முடியாது எனத் தீர்மானிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தமங்காத்தா 2’ திட்டம் தொடங்குவதற்குமே முன்னர் நின்றுவிட்டது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!