ஓணம் என்பது கேரளாவின் மிகப்பெரிய பண்டிகையாகும். மகாபலி, வாமனன், சுக்கிராச்சாரியார், நாராயணன் ஆகியோர் இந்தக் கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
ஓணம் மாதம் ஆவணி மாதத்தில் ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் நட்சத்திரம் வரை பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் பெருவிழாவாகும். இது கேரள மாநிலத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும்.
இன்றும் கேரளாவில் ஓணம் மிகுந்த சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் நாளன்று மக்கள் தங்கள் வீடுகளை மலர்களால் அலங்கரித்து, புதிய உடைகள் அணிந்து, கோவில்களுக்கு சென்று, அயலார்களுடன் இனிப்புகளைப் பகிர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இந்த ஓணம் திருவிழா இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடப்படுவதற்குக் காரணம் ஒரு அசுரன்தான் என்பது தெரியுமா? ஆம், அவர் மகாபலி சக்கரவர்த்தி.
புராணங்களில், நாமும் பிரகலாதனின் கதையை அறிந்திருக்கிறோம். பிரகலாதன் அசுரக் குலத்தில் பிறந்தாலும், விஷ்ணுவுக்கு அவர் காட்டிய பக்தியால் நரசிம்மன் அவரை அருளியவன். அவரது பேரன் தான் மகாபலி சக்கரவர்த்தி. அவர் நாட்டை மிகவும் சிறப்பாக ஆட்சி செய்தார். ஆனால் அவரது ஆட்சிக்காலத்தில் தேவர்கள் துன்புறுத்தப்பட்டனர். எனவே, மகாபலியிடமிருந்து தங்களை காப்பாற்ற நாராயணனைத் தேவர்கள் தவம் செய்தனர். அவர்களின் வேண்டுகோளை இறைவன் ஏற்று வாமன அவதாரமாகத் தோன்றினார் என்று புராணங்கள் கூறுகின்றன.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
