Table of Contents
தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதையை வேகப்படுத்த பல முக்கிய திட்டங்கள் காத்திருக்கின்றன. ஆனால் ஒன்றிய அரசின் பாரபட்ச அணுகுமுறையால் இத்திட்டங்கள் தாமதிக்கின்றன. இதை எதிர்த்து, சென்னை நடைபெற்ற திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கைகளான மெட்ரோ, ரயில், விமான நிலைய திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் பரிமாரப்பட்டன.
தெற்கின் வளர்ச்சியை தடுக்கும் ஒன்றிய அரசின் அணுகுமுறைக்கு கண்டனம்
- தமிழ்நாடு கடந்த சில ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி, முதலீடு மற்றும் மக்கள் நலத்திட்டங்களில் நாட்டின் முன்னோடியாக திகழ்கிறது. மாநிலம் 34 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கிய நிலையில், ஒன்றிய அரசு தொடர்ந்து நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுகிறது. பல முத்திரைத் திட்டங்கள் அனுமதி இல்லாமல் தாமதிக்கின்றன.
- இதனால் மாநில உரிமைகள் பாதிக்கப்படுவதாக திமுக எம்.பிக்கள் கூட்டம் கடும் கண்டனம் தெரிவித்தது.
ரயில் திட்டங்களில் தமிழ்நாட்டை புறக்கணித்த ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு
- புதிய ரயில் திட்டங்கள் அறிவிக்கப்படாததோடு, முன்பு அறிவிக்கப்பட்ட பல திட்டங்களும் நிறைவேறாமல் உள்ளன. 2024–25 ஆம் ஆண்டுக்கான ரயில்வே நிதியில் தெற்கு ரயில்வேக்கு வெறும் 301 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
- இந்தப் பாரபட்சத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு பிரதமர் நேரடியாக தலையிட வேண்டியது அவசியம்
- கோவை மற்றும் மதுரை போன்ற வேகமாக வளர்ந்து வரும் நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அவசியம். முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு முறை நேரில், மேலும் கடிதம் மூலமாகவும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
- ஆனால் ஒன்றிய அரசு இதற்கு இன்னும் பதில் அளிக்காமல் உள்ளது.
- எனவே பிரதமர் மோடி தலையிட்டு இத்திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை–மதுரை விமான நிலைய விரிவாக்கம் – மாநில வளர்ச்சிக்கு அவசியம்
- விமான போக்குவரத்து வளர்ச்சியால் பொருளாதாரம் பல மடங்கு உயரும். அதனால் கோவை, மதுரை விமான நிலையங்களை விரிவாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மதுரை பன்னாட்டு விமான நிலையம் உருவாகினால் தெற்கு மாவட்டங்களுக்கு பெரிய வளர்ச்சி வாய்ப்பு கிடைக்கும்.
- ஆனால் ஒன்றிய அரசு இன்னும் அனுமதி அளிக்காததால், திமுக எம்.பிக்கள் கூட்டம் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
கலைஞர் பல்கலைக்கழக சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்
- கும்பகோணத்தில் அமைக்க முன்வைக்கப்பட்ட கலைஞர் பல்கலைக்கழக சட்டத்தை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருப்பது ஜனநாயகத்தை அவமதிப்பதாகக் கூட்டத்தில் கூறப்பட்டது.
- இதற்கு உடனடியாக ஒப்புதல் பெற நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் குரல் கொடுப்பார்கள் என முடிவு செய்யப்பட்டது.
விவசாயிகளை பாதுகாக்க நெல் கொள்முதல் விதிகளில் தளர்வு அவசியம்
- மழை காரணமாக நெல் மணிகளில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், 17% என நிர்ணயிக்கப்பட்ட வரம்பை 22% ஆக உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை வைத்திருந்தார்.
- ஆனால் ஒன்றிய அரசு இன்னும் இதை ஏற்காததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இக்கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூட்டம் வலியுறுத்தியது.
செறிவூட்டப்பட்ட அரிசி (FRK) விநியோகத்தில் ஏற்பட்ட தாமதங்களை நீக்க வேண்டும்
- FRK மாதிரிகளை பரிசோதிக்கும் காலம் அதிகமாக இருப்பதால், நெல் கொள்முதல் செயல்முறை தாமதிக்கிறது. இதனால் நெல் மணிகள் தரக்குறைவாகும் அபாயமும் உள்ளது.
- எனவே FRK க்கான விதிகளை தளர்த்தியும், அனுமதி செயல்முறையை விரைவுபடுத்தியும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சமக்ர சிக்ஷா நிதியான 3548.22 கோடி ரூபாயை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும்
- கல்வியில் புதிய கொள்கை பெயரில் தலையிட முயலும் ஒன்றிய அரசின் பழிவாங்கும் அணுகுமுறையை கூட்டம் கண்டித்தது. மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்காக வேண்டிய சமக்ர சிக்ஷா நிதி உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
தீர்மானங்களின் பொதுச் செய்தி – தமிழ்நாட்டை வஞ்சிக்காதீர்கள்
ஒன்றிய அரசு தொடர்ந்து காட்டும் பாரபட்சமும் தாமதமும் மாநில வளர்ச்சியை தடுக்கின்றன. எனவே தமிழக உரிமைகளுக்காக திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் மேலும் தீவிரமாக குரல் கொடுப்பார்கள் என்று தீர்மானிக்கப்பட்டது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!